கேப்டன் ரூட் ரன்-அவுட்: இங்கிலாந்து திணறல்

வெள்ளி, 24 ஜூலை 2020 (21:25 IST)
கேப்டன் ரூட் ரன்-அவுட்: இங்கிலாந்து திணறல்
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தது இன்று இரு அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தை அதை அடுத்து இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் களமிறங்கியது
 
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர் ரோச் மற்றும் சேஸ், கேப்ரியல் ஆகியோர்களின் அபார பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறினர். தொடக்க ஆட்டக்காரர் சிப்லே முதல் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.  அவரை தொடர்ந்து கேப்டன் ரூட் 17 ரன்னில் ரன் அவுட் ஆனார். மேலும் பர்ன்ஸ் 57 ரன்களுக்கும் ஸ்டோக்ஸ் 20 ரன்களுக்கும் தங்களது விக்கெட்டுக்களை பறி கொடுத்தனர். தற்போது போப் அரைசதம் அடித்தும், பட்லர் 12 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.
 
மே.இ.தீவுகள் தரப்பில் ரோச் இரண்டு விக்கெட்டுக்களையும் சேஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சற்றுமுன் வரை இங்கிலாந்து அணி 63 ஓவரில் 4 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் நான் இந்த நிலையில் இருப்பதற்குக் காரணம் ’’இவர்தான்’’– கோலி உருக்கம்