மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

Siva
புதன், 5 நவம்பர் 2025 (09:31 IST)
வரலாற்று சிறப்புமிக்க முதல் மகளிர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றிய தீப்தி ஷர்மா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோருக்கு பாராட்டு விழா நடத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் முடிவு செய்துள்ளது.
 
தீப்தி ஷர்மா: தொடரின் சிறந்த வீராங்கனையாக அறிவிக்கப்பட்ட இவர், 22 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் 215 ரன்களும் சேர்த்தார். இறுதிப்போட்டியில் 58 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
 
ரிச்சா கோஷ்: அதிரடி பேட்டிங்கில் சிறந்து விளங்கிய இவர், 235 ரன்களை 133.52 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். அதிக சிக்ஸர்கள் (12) அடித்த சாதனையையும் இவர் கூட்டாக பகிர்ந்துகொண்டார்.
 
இந்நிலையில் ஈஸ்ட் பெங்கால் கிளப் தலைவர் முரளி லால் லோஹியா, இருவருக்கும் தனிப்பட்ட கடிதங்களை அனுப்பினார். தீப்தி ஷர்மாவின் மாநில அணியின் மீதான அற்பணிப்பையும், ரிச்சா கோஷின் பயணம் இளம் பெண்களுக்கு ஓர் உத்வேகம் அளிப்பதையும் அவர் பாராட்டினார். இவர்களின் வெற்றி பெங்கால் விளையாட்டு பாரம்பரியத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக கிளப் தெரிவித்துள்ளது. இந்த விழா வீராங்கனைகளின் வசதிக்கேற்ப நடைபெறும்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments