Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யோடு தோனி… பேவரைட் புகைப்படத்தை பகிர்ந்த லெஜண்ட் கிரிக்கெட்டர்!

Advertiesment
விஜய்யோடு தோனி… பேவரைட் புகைப்படத்தை பகிர்ந்த லெஜண்ட் கிரிக்கெட்டர்!
, புதன், 8 ஜூலை 2020 (08:31 IST)
நடிகர் விஜய் தன் மகனுடனும், தோனி மற்றும் மேத்யூ ஹெய்டனும் இருக்கும் புகைப்படம் நேற்று இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் தோனிக்கு வாழ்த்துகளைக் கூறி, தோனியுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையின் கீழ் விளையாடிய மேத்யூ ஹெய்டன் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் 2008 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணியின் விளம்பரத் தூதுவராக இருந்த விஜய் தன் மகனுடன் தோனி மற்றும் ஹெய்டனுடன் இருக்கிறார். மேலும் ஹெய்டன் இது தனக்குப் பிடித்தமான புகைப்படங்களில் ஒன்று எனக் கூறி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை 28 படத்துக்கு சிம்பு செய்த உதவி – மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட இயக்குனர்!