சிஎஸ்கே அணியில் எடுக்காதது ஈட்டியால் குத்தியது போல இருந்தது! ஆதங்கத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர்!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (18:50 IST)
இந்திய அணியில் விளையாடி வரும் வீரரான தினேஷ் கார்த்திக் தான் தனது சொந்த மாநிலத்தின் அணியான சிஎஸ்கேயில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அணியில் விளையாட எல்லாத் தகுதிகளும் இருந்தும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் தினேஷ் கார்த்திக். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தனது சொந்த மாநில அணியான சிஎஸ்கே அணிக்கு விளையாட முடியாதது குறித்து வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதில் ‘2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தேர்வின் போது சி எஸ் கே அணியில் என்னைக் கண்டிப்பாக தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இருந்தேன். எனக்கிருந்த சந்தேகம் நான் கேப்டனா? இல்லையா என்பதுதான். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக தோனியை தேர்வு செய்தார்கள். அது எனது நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல இருந்தது. ஆனால் இப்போதும் தோனி தலைமையில் சி எஸ் கே அணியில் விளையாட தயாராக இருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்துவீச்சில் பதிலடி கொடுத்த இங்கிலாந்து.. 9 விக்கெட்டுக்களை இழந்து ஆஸ்திரேலியா தடுமாற்றம்..!

ஆஷஷ் தொடரில் அதிர்ச்சி ஆரம்பம்.. 172 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்-அவுட்..! 7 விக்கெட் வீழ்த்திய ஸ்டார்க்..!

ஸ்மிருதி மந்தனா திருமண தேதி அறிவிப்பு.. பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து..!

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

அடுத்த கட்டுரையில்
Show comments