நேற்றும் டக் அவுட்.. ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்..!

Webdunia
திங்கள், 22 மே 2023 (07:43 IST)
நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பெங்களூர் அணியின் தினேஷ் கார்த்திக் முதல் பந்திலையே அவுட் ஆனதை அடுத்து ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆனவர் என்ற மோசமான சாதனையை அவர் பெற்றுள்ளார். 
 
ஏற்கனவே தினேஷ் கார்த்திக்  ஐபிஎல் தொடரில் 16 முறை டக் அவுட் ஆன நிலையில் நேற்றும் டக் அவுட் ஆனதால் அவர் 17 முறை அதாவது அதிக முறையிட டக் அவுட்ஆனவர் என்ற மோசமான சாதனையை பெற்றுள்ளார். 
 
ஐபிஎல் தொடரில் டக் அவுட்ஆனவர் பட்டியலில் 16 முறை டக் அவுட் ஆகி இரண்டாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில மாதங்களாகவே தினேஷ் கார்த்திக் ஃபார்ம் சரியில்லை என்றும் அவர் பேட்டிங் செய்ய திணறி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். அதுமட்டும் இன்றி சில சமயம் அவர் விக்கெட் கீப்பிங் சரியாக செய்யவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் இருப்பது சந்தேகம் என்று கூறப்படுவது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments