Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்றைய டி-20 போட்டியில் தோனி நீக்கமா?

Advertiesment
dhoni
, செவ்வாய், 7 நவம்பர் 2017 (12:44 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி தொடரில் கடைசி மற்றும் 3வது டி-20 இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி தொடரை கைப்பற்றும் நிலை உள்ளது.



 
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராஜ்கோட்டில் நடந்த 2வது டி-20 போட்டியில் முதல் ஐந்து பந்துகளில் 26 ரன்கள் எடுத்த தோனி, அடுத்த 32 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் தோனி டி-20 போட்டிக்கு லாயக்கற்றவர் என்ற விமர்சனம் எழுந்துள்ளது
 
இன்றைய போட்டியில் பேட்டிங்கை விட பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தோனிக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் கேப்டன் விராத் கோஹ்லிக்கு இக்கட்டான நிலையின்போது டிப்ஸ் கொடுக்க தோனியின் அனுபவம் தேவைப்படும். மேலும் தோனி அளவுக்கு விக்கெட் கீப்பிங் செய்ய இந்தியாவில் ஆள் இல்லை. எனவே என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். டி-20 உலகக்கோப்பையை பெற்று தந்த தோனிகே இந்த நிலையா? என்று அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டோனிக்கு டி20 போட்டியில் விளையாட தகுதியில்லை; வி.வி.எஸ்.லட்சுமண்