Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் ஜெயிப்பது முக்கியமானது.. டாஸில் தோல்வியடைந்த தோனி பேட்டி..!

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2023 (19:12 IST)
சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி இன்று நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பெங்களூரு அணி கேப்டன் டூ பிளஸ்சிஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் தோல்வி அடைந்தவுடன் தோனி பேட்டி அளித்த போது ’டாஸ் ஜெயிப்பது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இரண்டாவதாக பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது ரொம்ப கடினம். டாஸ் தோல்வி அடைந்து முதலில் பேட்டிங் செய்தால் நல்ல ஸ்கோர் எடுக்க வேண்டும் என்பது பனியால் கடினம் ஆகிறது.

இருப்பினும் நான் அதிகம் யோசிக்க விரும்பவில்லை, ஒரு நல்ல தொடக்கத்தை பெற வேண்டும், அவ்வப்போது சில விஷயங்களை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன் என்று தெரிவித்தார். மேலும் காயங்கள் எங்கள் அணியை பாதித்திருந்தாலும் புதிதாக வந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் எங்கள் அணியில் எந்த பின்னடையும் இல்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூர் கேப்டன் டூ பிளஸ்சிஸ் கூறிய போது 180 ரங்களுக்கு குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டால் இந்த வயதானத்தில் வெற்றி அடைவது எளிது என்றும் இது ஒரு சிறிய மைதானம் என்றாலும் மேற்பரப்பு நன்றாக உள்ளது என்று சில இடங்களில் பனித்துளி உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் கோபமாக இருக்கும் கேப்டனின் கீழ் யாரும் விளையாட மாட்டார்கள்.. யாரை சொல்கிறார் ரியான் பராக்?

பல விமர்சனங்களை சந்தித்த யோ யோ டெஸ்ட்டை நீக்க முடிவு செய்துள்ளதா பிசிசிஐ?

நான் இனிமேல் கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை… ரியான் பராக்கின் பேச்சை வெளுத்து வாங்கிய ஸ்ரீசாந்த்!

ரோஹித் செய்த ஒரு ஃபோன் காலால் முடிவை மாற்றிய ராகுல் டிராவிட்… கோப்பையுடன் விடைபெற்றதற்குப் பின் இப்படி ஒரு கதை இருக்கா?

பார்படாஸ் மைதான புற்களைத் தின்றது ஏன்?... ரோஹித் ஷர்மாவின் எமோஷனல் பதில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments