Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி அங்கு ஜாலி, ஆனால் கோலி இங்கு காலி!!

தோனி அங்கு ஜாலி, ஆனால் கோலி இங்கு காலி!!
, சனி, 25 பிப்ரவரி 2017 (12:04 IST)
இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி புரட்டி எடுத்துக் கொண்டுள்ளதால் கோலி பெரிய தலைவலியுடன் இருக்கிறார்.


 
 
ஆனால், கேப்டன் பொறுப்பை அவரிடம் கொடுத்த தோனி, பவுலிங் பேட்டிங் என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.
 
இந்திய அணியின் வெற்றிக்கேப்டன் தோனி, தலைமையில் இந்திய அணி மூன்று விதமான உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. 
 
ஆனால், மோசமான பார்ம், தொடர் தோல்வி காரணமாக எழுந்த விமர்சனங்களை தவிர்க்க, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை  விட்டு விலகினார். 
 
பின்னர் ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு இவர் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் சமீபத்தில் நீக்கப்பட்டார். 
 
இந்நிலையில், வரும் 25ஆம் தேதி ஜார்க்கண்ட்டில் விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதில் ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக தோனி விளையாட உள்ளார்.
 
இதற்காக கொல்கத்தாவில் பவுலிங் பயிற்சி, இளம் வீரர்களுக்கு ஆலோசனை என ஜாலியாக தனது கிரிக்கெட் காலத்தை போக்கிக்கொண்டுள்ளார் தோனி. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த நாள் எங்களுக்கு மோசமான நாள் தான். கும்ப்ளே ஒப்புதல்