Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் கிரிக்கெட்… பந்து வீச்சைத் தேர்வு செய்த சென்னை கிங்ஸ்! மிரட்டுமா மும்பை இந்தியன்ஸ்?

ஐபிஎல் கிரிக்கெட்… பந்து வீச்சைத் தேர்வு செய்த  சென்னை கிங்ஸ்! மிரட்டுமா மும்பை இந்தியன்ஸ்?
, சனி, 19 செப்டம்பர் 2020 (19:10 IST)
இந்த வருடம் ஐபிஎல் போட்டிகள் நடக்குமா நடக்காதா என்று ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளன.

இந்நிலையில் 13 வது ஐபிஎல் போட்டி இன்று துவங்கி வரும் நவம்பர் 10 ஆம் தேதி நடக்கிறது. இதில்சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

முதல் போட்டியே மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் என்பதால் ரசிகர்கள் மிக ஆர்வமுடன் இப்போட்டியைப் பார்க்க தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் சிங்கங்களும், மும்பை இந்தியன்ஸ் சிறுத்தைகளும்  இரவு 7:30 மணிக்கு மோதுகின்றனர். எனவே தற்போது இரு அணிகளும் புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஆரம்பமே அசத்தாகி உள்ளதால் சென்னை கிங்ஸ் அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.#IPL2020 #IPL #Chennaikingsn #mumbaiindians
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் கிரிக்கெட்… சென்னை சிங்கங்களும், மும்பை சிறுத்தைகளும் மைதானத்திற்குச் சென்றனர்…