Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி கிளாஸ்: 4 ஆம் நிலையே அவருக்கு சரியானது: ரோகித்!!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (17:50 IST)
சில தினங்களுக்கு முன் நடந்த முதல் டி20 போட்டியில் தோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக ரன்களை விளாசி ஸ்கோரை நல்ல நிலைக்கு உயர்த்த உதவியாய் இருந்தது அவரது ஆட்டம். 
 
இந்நிலையில், இதுகுறித்து கேப்டன் ரோகித் சர்மா போட்டியை பற்றியும் தோனியை பற்றியும் பின்வருமாறு பேசினார். டாஸ் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என தெரியும், ஆட்டம் முழுதும் பனிப்பொழிவு இருந்தது. 
 
ராகுலை தொடக்கத்தில் களமிறக்கியது நல்ல உத்தியாக அமைந்தது. தோனி மற்றும் பாண்டே அருமையாக இன்னிங்ஸை முடித்தனர். தோனி கிளாஸ். நான்காம் நிலை தோனிக்கு உண்மையில் சாதகமாகதான் உள்ளது.
 
தோனி இந்திய அணிக்காக ஏகப்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். எனவே தோனி நான்காம் நிலையில் பேட் செய்வதையே விரும்புகிறோம். 
 
தோனி நல்ல பினிஷ்ர். அவர் 4 ஆம் நிலையில் இறங்கி சுதந்திரமாக விளையாட வேண்டும். நெருக்கடி, அழுத்தமில்லாமல் அவர் ஃப்ரீயாக ஆட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments