Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாட்டு பாடி அசத்தும் தோனியின் மகள் – வைரலான வீடியோ!

Advertiesment
பாட்டு பாடி அசத்தும் தோனியின் மகள் – வைரலான வீடியோ!
, திங்கள், 6 ஜனவரி 2020 (12:17 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் பாட்டு பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. கடந்த உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு எந்த டெஸ்ட் தொடரிலும் கலந்து கொள்ளாத தோனி, இராணுவ பணிகள், குடும்பத்தினருடன் சுற்றுலா என நாட்களை கழித்து வருகிறார்.

தோனி திரும்ப விளையாட வரமாட்டாரா என ரசிகர்கள் ஏக்கத்தோடு காத்திருந்தாலும், அவரது பதிவுகளுக்கு சென்று கமெண்ட் போட தவறுவதில்லை. சமீபத்தில் பனி நிறைந்த சுற்றுலா தளத்திற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் தோனி.

அங்கே தனது குழந்தை ஸியா கித்தாரை வாசித்தப்படி ஆங்கில பாடல் ஒன்று பாடியுள்ளார். அதை பதிவு செய்த தோனி அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார். தோனியின் மகள் பாடியுள்ள அந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக ஷேர் செய்து வருகிறார்கள். தோனி மகளின் திறமையை பாராட்டி பலர் கமெண்டும் இட்டுள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Snow brings the best out of her @ziva_singh_dhoni

A post shared by M S Dhoni (@mahi7781) on


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹேர் ட்ரையர், அயர்ன் பாக்ஸ்... IND vs SL மேச்சுக்கு கைக்கொடுக்காத லஃப் ஹேக்ஸ்!!