Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐதராபாத் அணிக்கு 164 என்ற இலக்கை கொடுத்த டெல்லி

Advertiesment
ஐதராபாத் அணிக்கு 164 என்ற இலக்கை கொடுத்த டெல்லி
, சனி, 5 மே 2018 (21:44 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களத்தில் இறங்கியது
 
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 163 ரன்கள் எடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஷா 65 ரன்களும் கேப்டன் எஸ்.எஸ்.ஐயர் 44 ரன்களும் குவித்தனர். ஐதராபாத் அணியில் ரஷித்கான் 2 விக்கெட்டுக்களையும், கவுல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 164 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் அணியினர் பேட்டிங் செய்யவுள்ளனர். இந்த போட்டியில் டெல்லி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஒரு வாய்ப்பாக அமையும், அதேநேரத்தில் ஐதராபாத் வெற்றி பெற்றால் சென்னை அணியை பின்னோக்கி தள்ளிவிட்டு முதல் இடத்தை பிடிக்கும் 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அணிக்கு த்ரில் வெற்றி - பெங்களூர் அணியை வீழ்த்தியது