நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதுகிறது.
கடந்த போட்டியில், பந்து வீச்சில் சொதப்பி சென்னை அணி கொல்கத்தாவுடனான போட்டியில் தோல்வி அடைந்தது. பெங்களூர் அணி மும்மை இந்தியன்ஸ் அணியை 14 ரன்கள் வித்தியாசத்திஒல் தோற்கடித்தது.
பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது.
பெங்களூர் அணி 8 ஆட்டங்களில் 3 வெற்றி, 5 தோல்விகளுடன் 6 புள்ளிகளுடன் உள்ளது. சென்னை அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று உள்ளது.
பெங்களூர் அணி வெற்றிக்காகவும், சென்னை அணி பீல்டிங் மற்றும் பவுளிங் திறமையை மீண்டும் நிறுபிப்பதற்காகவும் போட்டியிடும். எனவே, பெங்களூர் ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்புடன் இருப்பார்கள்.
ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் மற்றும் தகுதி சுற்று புனேவில் மே 23 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இது தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.