Publish Date: Thu, 10 Sep 2020 (10:01 IST)
Updated Date: Thu, 10 Sep 2020 (10:23 IST)
சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தீபக் சஹார் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதில் சிஎஸ்கே பந்து வீச்சாளரான தீபக் சஹாரும் ஒருவர். இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போது தொடர்ந்து இரண்டு சோதனைகளிலும் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. இதையடுத்து அவர் பயிற்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்.