Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் நிறவெறியன் இல்லை… குயிண்டன் டிகாக் விளக்கம்!

நான் நிறவெறியன் இல்லை… குயிண்டன் டிகாக் விளக்கம்!
, வியாழன், 28 அக்டோபர் 2021 (17:26 IST)
நிறவெறிக்கு எதிராக மண்டியிட்டு உறுதிமொழி எடுக்கமாட்டேன் என கூறியதாக குயிண்டன் டி காக் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று தென்னாப்பிரிக்கா உலகக்கோப்பை லீக் சுற்றில் மோதியது. இந்நிலையில் போட்டி தொடங்குவதற்கு கொஞ்சம் முன்பாக அணியில் டிகாக் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக ரிசா ஹென்ரிக்ஸ் அணியில் சேர்ந்துள்ளார்.

நிறவெறிக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணிவீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஒரு காலை மடக்கி மனித குல ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக உறுதி மொழி எடுப்பதாக முடிவு செய்தனர். ஆனால் அதைக் கடந்த போட்டியில் டிகாக் செய்யவில்லை. அதனால் அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே மோதல் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பலரும் டி காக்குக்கு எதிராக கண்டனம் தெரிவித்து  வருகின்றனர். இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு டி காக் விளக்கம் அளித்துள்ளார். அதில் ‘என்னால் எழுந்த குழப்பத்துக்கும் கோபத்துக்கும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நிறவெறிக்கு எதிராக நிற்பதின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்கிறேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆடாததன் மூலம் நான் யாரையும் மரியாதைக் குறைவாக கருதவில்லை. 

நான் கலப்பின குடும்பத்தில் இருந்து வந்தவன். என்னுடைய வளர்ப்புத்தாய் கருப்பினத்தைச் சேர்ந்தவர். என் நாட்டுக்காக ஆடுவதில் பெருமை கொள்கிறேன். ஆனால் எந்தவித விவாதமும் இல்லாமல் ஒன்றைச் செய்ய சொன்னால் அதன் அர்த்தத்தை இழக்கிறது. என்னுடன் விளையாடியவர்களுக்கு நான் எப்படிப்பட்டவன் என்று தெரியும். என்னை நிறவெறியன் என்றால் அது காயப்படுத்தும் ஏனெனில் நான் அப்படியல்ல. இது என்னைக் காயப்படுத்துகிறது, கருத்தரிக்கும் என் மனைவியைக் காயப்படுத்துகிறது. என் குடும்பத்தையே காயப்படுத்துகிறது.’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோலி இருக்கும்போது எப்படி மேட்ச் அவங்க கைக்கு போகும்! ஜடேஜா ஆவேசம்!