Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக ஃபார்முக்கு வந்த டேவிட் வார்னர்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (11:32 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி வந்தார்.

ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். அதே போல ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இதன் காரணமாக அவர் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்தும் நீக்கப்பட்டார். கடைசி சில போட்டிகளில் அவர் மைதானத்துக்குள் கூட வர அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அவர் நேற்றைய இலங்கைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி மீண்டும் தன் பழைய ஆட்டத்திறனை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் 42 பந்துகளில் 65 ரன்களை சேர்த்தார். வார்னர் பார்முக்கு வந்திருப்பது ஆஸி அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸி அணி அடுத்து இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அஸ்வினுக்குப் பின்னால் ஒளிந்துகொள்வதா? தோனியை விமர்சிக்கும் ரசிகர்கள்!

கடைசி ஓவரை ஏன் க்ருனாள் பாண்டியா வீசினார்?... தோனி சிக்ஸ் அடிக்க வேண்டுமென்றே இப்படி ஒரு முடிவா?

மோசமான ஃபீல்டிங் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது… சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments