ஆகஸ்ட் 21ம் தேதி துபாய் கிளம்புகிறது சிஎஸ்கே அணி: தலைமை செயல் அதிகாரி

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:35 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவதற்கு மூன்று மைதானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் தயாராக இருப்பதாகவும் விரைவில் ஐபிஎல் அணிகள் பயிற்சிக்காக துபாய் செல்லும் என்று கூறப்பட்டது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஐபிஎல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 21-ஆம் தேதி துபாய் புறப்பட்டு செல்ல இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார் 
 
சேப்பாக்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி பயிற்சி தொடங்கும் என்று கூறிய அவர் தோனி, ரெய்னா உள்பட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆகஸ்ட் 15 16ம் தேதிகளில் சென்னை வந்த அடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி: கோலி, கெய்க்வாட் அசத்தல்!

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments