சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

Siva
வியாழன், 1 மே 2025 (07:27 IST)
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில், ஒரு சீசனில் சொந்த மைதானத்தில் அதிக தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்று இருப்பது, ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து இந்த சீசனில் சென்னை அணிக்கு இது எட்டாவது தோல்வியாகும். அதில் ஐந்து தோல்விகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலேயே கிடைத்துள்ளது என்பது  மோசமான சாதனையாக கருதப்படுகிறது.

கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை மைதானத்தில் நான்கு தோல்விகளை அடைந்திருந்த  சிஎஸ்கே அணி, 2012 ஆம் ஆண்டும் சொந்த மைதானத்தில் நான்கு தோல்விகளை அடைந்தது. அதன் பிறகு தற்போது 2025 ஆம் ஆண்டில் சொந்த மைதானத்தில் 5 தோல்விகளை அடைந்து, முந்தைய சாதனையை முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மைதானத்தில் ஒரு சீசனில் அதிக தோல்விகளை சிஎஸ்கே அணி செய்துள்ளது, ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று நான்கு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது என்பதும்,  தொடரிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறிவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை நட்சத்திரங்கள்: தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷை கௌரவப்படுத்த ஈஸ்ட் பெங்கால் கிளப் திட்டம்!

ஏபிடி தயவு செஞ்சு எனக்கு அந்த விஷயத்துல உதவி செய்ங்க… சூர்யகுமார் யாதவ் கோரிக்கை!

உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!

போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளேன்… முன்னாள் ஜிம்பாப்வே கேப்டன் அறிவிப்பு!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments