Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வை அறிவிக்கப் போகிறாரா தோனி?... நேற்றைய போட்டியில் சூசக தகவல்!

vinoth
வியாழன், 1 மே 2025 (06:58 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்குப் பதில் தோனி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் ‘எந்தப் பயனும் இல்லை’ என ரசிகர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.

தற்போது வரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே அணி அதில் எட்டில் தோற்றுள்ளது. இதன் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றால் கூட ப்ளே ஆஃப் செல்ல முடியாது. இதன் காரணமாக பெரிய எதிர்பார்ப்போடு இந்த சீசனைத் தொடங்கிய சி எஸ் கே அணி மிகுந்த ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு அளித்துள்ளது.

இதன் காரணமாக தோனி இந்த சீசனோடு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறவேண்டும் எனக் கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் சிலர் கூறி வருகின்றனர். நேற்றையப் போட்டியில் டாஸ் போடும் போது டேனி மோரிசன் “உங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது அடுத்த சீசனிலும் விளையாடுவீர்களா?’ என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு தோனி “நான் அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்பதே உறுதியாக தெரியவில்லை” என சிரித்துக் கொண்டே பதிலளித்தார். இதன் காரணமாக தோனி ஓய்வை அறிவிப்பாரா என்ற எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் இல்லை.. ஆட்ட முடிவிலாவது மாற்றம் வருமா?

“தோனி யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை… ஆனால்?”… கில்கிறிஸ்ட் கொடுத்த அட்வைஸ்!

’கோவிந்தா.. கோவிந்தா..!’ திருப்பதியில் RCB கேப்டன் ரஜத் படிதார் சாமி தரிசனம்!

ஒரே நாளில் ஹீரோவான சூர்யவன்ஷி… படையெடுக்கும் பாலோயர்ஸ்!

அதிரடி சதத்துக்கு உடனடி பலன்… இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சூர்யவன்ஷி?

அடுத்த கட்டுரையில்
Show comments