Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுங்கள்: காவிரிக்காக ரஜினியின் குரல்!

Advertiesment
ஐபிஎல் போட்டியை நிறுத்துங்கள் அல்லது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுங்கள்: காவிரிக்காக ரஜினியின் குரல்!
, ஞாயிறு, 8 ஏப்ரல் 2018 (16:48 IST)
உச்ச நீதிமன்றம், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அறிவுறித்தியிருந்ததை, மதிக்காமல் தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறது. 


மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத காலக் கெடு வேண்டும் என கால அவகாசம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. இதனால் தமிழகத்தில் காவிரிக்காக போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நடிகர் சங்கம் சார்பில் அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்துல் நடிகர்கள் பலர் பங்கேற்று உள்ளனர். 
 
இந்த போரட்டத்தில் நடிகர் ரஜினி பங்கேற்கும் முன்னர் செய்தியார்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ரஜினி கூறியதாவது, நியாமன கோரிக்கைகாக போராடுகிறோம். மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் நல்லது அப்படி இல்லை என்றால் தமிழக மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சிஎஸ்கே அணி போட்டியின் போது கருப்பு பேட்ஜ் அணித்து விளையாக பிசிசிஐ மற்றும் ஐபிஎல் ஒருங்கிணைப்பாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும், இதன் மூலம் இது தேசிய கவனத்தை பெரும் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

21 கோடி ரூபாய் லாட்டரி பரிசு; கேரள டிரைவருக்கு துபாயில் அதிர்ஷ்டம்