Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோகித் சர்மாவுடன் மோதலா ? அவர் அணியில் சேர்க்கப்படாதது ஏன் ? விராட் கோலி விளக்கம்!

ரோகித் சர்மாவுடன் மோதலா ? அவர் அணியில் சேர்க்கப்படாதது ஏன் ? விராட் கோலி விளக்கம்!
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (18:31 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி முடிந்தவுடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக விஹாரியை சேர்த்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்திருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இப்போட்டில் இந்திய அணியில் பல சாதனைகள் படைத்த ’பேட்ஸ் மேன்’ ரோஹித் சர்மா மற்றும் சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின்  ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
 
கிரிக்கெட் நிர்வாகத்தின் இம்முடிவுக்கு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இதுகுறித்து விராட் கோலி கூறியுள்ளதாவது :
 
அணி தேர்வு என்பது போட்டில் சூழ்நிலையை பொறுத்து மாறுமாடும். குறிப்பாக விஹாரியின் தேர்வு செய்தது அவர் ஒரு நடுகள ஆட்டக்காரர் மற்றும் ஒரு பந்துவீச்சாளர்.  அதனால் போட்டியில்  அவர் பந்துவீசுவார். அதன் பொருட்டுதான் அவரை தேர்வு செய்தோம். அணியின் கேப்டனாக சில முடிவுகளை நான் எடுக்கிறேன்.ஆனால் அதில் வெற்றி என்பது அனைத்து வீரர்களையும் சார்ந்தது. அதனால் வெற்றி பெற அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்.  என்று தெரிவித்தார்.
 
மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வியை தழுவிய பின்னர், ரோஹித் சர்மா  மற்றும் கேப்டன் வீராட் கோலி ஆகியோரிடையே மோதல் வலுத்ததாக தகவல்கள் வெளியானது. அதன்பின்னர் விராட்டின் மனைவி அனுஷ்கா சர்மா சில கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
ரோஹித் சர்மாவுடனான மோதல் குறித்து கோலியிடம் கேட்டதற்கு ,அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சாம்பியனை கதிகலங்க வைத்த இந்திய வீரர்: அமெரிக்க ஓபன் டென்னிஸ்