Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia

காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி

Advertiesment
sl vs sa
, வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (17:20 IST)
காமன்வெல்த் கிரிக்கெட்: 46 ரன்களில் சுருண்ட இலங்கை மகளிர் அணி
கடந்த சில நாட்களாக காமன் வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இதில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய நிலையில் இலங்கை அணி படு மோசமாக பேட்டிங்செய்துள்ளது 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 17.1 ஓவர்களில் வெறும் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த போட்டியில் விளையாடிய கேப்டன் அட்டப்பட்டு தவிர மற்ற ஒன்பது வீராங்கனைகளும் சிங்கிள் டிஜிட் ரன்களில் அவுட் ஆகி உள்ளனர் என்பதும் அதில் நான்கு பேர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 47 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க அணி 5 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உத்வேகம் தரும் வீராங்கனை அமுதா: செயற்கை காலுடன் பாரா பேட்மின்டன் விளையாட்டில் சாதிக்கும் பெண்