Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 3 வீரர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று!

Advertiesment
Corona
, திங்கள், 19 ஜூலை 2021 (09:21 IST)
ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 3 வீரர்கள் உட்பட 10 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து ஜப்பானின் டோக்கியோ நகரில் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெற உள்ளது. இதற்காக விளையாட்டு அரங்கம், வீரரர்கள் தேர்வு நடைபெற்று போட்டியில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கு நவீன வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. 
 
இப்படியான நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனா பரிசோதனைக்கு பிறகு ஒவ்வொரு அணியினரும் ஒலிம்பிக் கிராமத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் அறையில் தங்கி வருகின்றனர்.
 
இதனிடையே ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான பரிசோதனையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள 3 வீரர்கள் உட்பட 10 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
 
தற்போது வரை ஒலிம்பிக் பணியில் இருக்கும் 55 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஒலிம்பிக் நிர்வாக கமிட்டி வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

IND vs SL: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!