Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லிக்கு ஓய்வு: ரோஹித் சர்மா தலைமையில் 5வது டி20

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (12:13 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஓய்வு எடுப்பதால் ரோகித் சர்மா கேப்டன் ஆகிறார். அதேபோல் ஏற்கனவே நான்காவது டி20 போட்டியில் காயம் காரணமாக விலகியிருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த அணிக்கு செளதி தலைமை ஏற்கிறார்.
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ரோகித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் களமிறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணி வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
இந்தியா: கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், மனிஷ் பாண்டே, ஷிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சாஹல், நவ்தீப் சயினி, பும்ரா,
 
நியூசிலாந்து: குப்தில், முன்ரோ, டிம் செய்ப்ரிட், டெய்லர், டாம் புரூஸ், மிட்செல், சாண்ட்னர், இஷ் ஷோதி, டிம் ஷோதி, ஹமிஷ் பென்னட், ஸ்காட் குஜ்ஜிலின்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments