டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்: அணியில் இணைந்தார் நடராஜன்

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (07:32 IST)
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்: அணியில் இணைந்தார் நடராஜன்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் தொடங்கி உள்ளது 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஹாரிஸ் ஆகியோர் களமிறங்கிய நிலையில் இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர் 
 
டேவிட் வார்னர் சிராஜ் பந்தில் ஒரே ஒரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானர் என்பதும், ஹாரீஸ் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ஷர்துல் தாக்கூர் பந்தில் அவுட்டானார் என்பதும் குறிப்பிடத்தக்கது தற்போது லாபுசாஞ்சே 19 ரன்களும், ஸ்டீபன் ஸ்மித் 30 ரன்களும் எடுத்து களத்தில் இருந்து விளையாடி வருகின்றனர். ஆஸ்திரேலியா அணி சற்றுமுன் வரை 26 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 65 ரன்கள் எடுத்துள்ளது
 
இன்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் முதல் முதலாக டெஸ்ட் போட்டியில் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அவருக்கு ஒட்டுமொத்த தமிழகமே வாழ்த்துக்களை கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு: ரோஹித் சர்மா, கில், புஜாரே, ரஹானே, மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சயினி, சிராஜ், நடராஜன்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

முத்துசாமி செஞ்சுரி.. மார்கோ 93 ரன்கள்.. 500ஐ நெருங்கியது தெ.ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

அடுத்த கட்டுரையில்
Show comments