இங்கிலாந்து பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் (Commonwealth Games 2022) போட்டிகளில் நேற்று இந்தியா 5 பதக்கங்களை வென்றுள்ளது.
2022ம் ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் பர்மிங்காமில் நடந்து வரும் நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். முன்னதாக 5 தங்கம் உள்பட 13 பதக்கங்களை இந்தியா வென்றிருந்த நிலையில் நேற்று மேலும் 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
நேற்றைய போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடைப்பிரிவில் துலிகா மான் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஆண்களுக்கான பளுத்துக்குதல் 109 கிலோ எடைப்பிரிவில் இறுதி போட்டியில் லவ்ப்ரீத் சிங் மூன்றாவது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.
ஸ்குவாஷ் போட்டியின் ஆண்கள் ஒற்றை பிரிவில் சவுரவ் கோசல் வெண்கல பதக்கம் வென்றார். ஆண்களுக்கான 190+ பளு தூக்கும் போட்டியில் குர்தீப் சிங் வெண்கல பதக்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் ஆண்கள் பிரிவில் தேஜஸ்வின் சங்கர் வெண்கலம் வென்றார்,
தற்போது 2022ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளது.