Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணிக்கு மீண்டும் திரும்புகிறார் புவனேஷ்குமார்: வெளியேறுவது விஜய்சங்கரா?

Advertiesment
அணிக்கு மீண்டும் திரும்புகிறார் புவனேஷ்குமார்: வெளியேறுவது விஜய்சங்கரா?
, செவ்வாய், 25 ஜூன் 2019 (22:03 IST)
காயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய நட்சத்திர பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளதாகவும், இதனையடுத்து அவர் இன்று பயிற்சிக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கடந்த ஜூன் 16ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றபோது, அந்த போட்டியில் அசத்தலாக பந்துவீசிய புவனேஷ்குமார் தனது மூன்றாவது ஓவரை வீசியபோது திடீரென காயம் அடைந்தார். அதனையடுத்து அவருக்கு பதிலாக அந்த ஓவரை விஜய்சங்கர் முடித்து வைத்தார்.
 
இந்த நிலையில்  புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது காயம் விரைவில் குணமடையும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து புவனேஷ்வர்குமார் அணிக்கு மீண்டும் விரைவில் திரும்புவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் அவர் தற்போது பூரண குணம் அடைந்துவிட்டதாகவும்  இதனையடுத்து அவர் இன்று வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படகாட்சியும் வெளியாகியுள்ளது. எனவே நாளை மறுநாள் இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதும் போட்டியில் புவனேஷ்குமார் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஷ்குமார் அணிக்கு திரும்பினால் விஜய்சங்கர் அணியில் இருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 16 லட்சம் டிப்ஸ் தூக்கிக்கொடுத்த பிரபல நட்சத்திரம் ! மக்கள் புகழாரம்