நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது
ஸ்கோர் விபரம்:
இந்தியா: 224/8 50 ஓவரகள்
விராத் கோஹ்லி: 67
கேதார் ஜாதவ்: 52
கே.எல்.ராகுல்: 30
விஜய் சங்கர்: 29
தோனி: 28
ஆப்கானிஸ்தான்: 213/10 49.5 ஓவர்கள்
முகமது நபி: 52
ரஹ்மத் ஷா: 36
குல்பதின் நப்: 27
ஜாட்ரான்: 21
ஆட்டநாயகன்: பும்ரா
இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
ஸ்கோர் விபரம்:
நியூசிலாந்து: 291/8 50 ஓவர்கள்
வில்லியம்சன்: 148
டெய்லர்: 69
மேற்கிந்திய தீவுகள்: 286 49 ஓவர்கள்
பிரெத்வெயிட்: 101
கெய்லே: 87
இன்றைய போட்டி: பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா