ஐபிஎல் அணிகளின் ஒன்றாகிய ராஜஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வீரரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் போட்டிகளில் இருந்து இந்த ஆண்டு விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 12ஆம் தேதி பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் கைவிரலில் காயம் ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கைவிரல் எலும்பு முறிவு அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது
இதனையடுத்து அவர் இனி வரும் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாட மாட்டார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அணியை வழி நடத்துவார் என்றும் சக வீரர்களுக்கு அவர் டிப்ஸ் கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது
இருப்பினும் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் பென்ஸ்டாக்ஸ் அணியில் இல்லாதது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. கடந்த 12ஆம் தேதி நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் சார்பில் ஓபனிங் வீரராக பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார் என்பது தெரிந்தது