Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியின் 100 ஆவது டெஸ்ட்… வாழ்த்தித் தள்ளிய பிசிசிஐ & சக வீரர்கள்!

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (12:35 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நாளை தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சமீபமாக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். இதற்கு அவருக்கும் பிசிசிஐக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் காரணம் என சொல்லப்படுகிறது. அவருக்குப் பின்னர் ரோஹித் ஷர்மா இப்போது கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இந்நிலையில் நாளை மொகாலியில் இலங்கைக்கு எதிராக நடக்க உள்ள போட்டி விராட் கோலியின் 100 ஆவது போட்டியாகும். எந்த வொரு கிரிக்கெட் வீரருக்கும் 100 ஆவது போட்டி என்பது மிகப்பெரிய சாதனை மைல்கல்லாகும். இதையடுத்து நாளை இந்த சாதனையை நிகழ்த்த உள்ள கோலிக்கு பிசிசிஐ மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் வீடியோ மூலமாக தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காத கோலி நாளை அந்த குறையையும் போக்கிவைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments