Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விராட் கோலி இடத்துக்கு ஆசைப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்!

Advertiesment
விராட் கோலி இடத்துக்கு ஆசைப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்!
, திங்கள், 28 பிப்ரவரி 2022 (16:55 IST)
இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயர் இலங்கை தொடரில் தொடர்ந்து 3 அரைசதங்கள் அடித்து சாதித்துள்ளார்.

கடந்த ஆண்டு காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர் அதன் பிறகு அணிக்கு திரும்பினாலும் பழைய பார்முக்கு வர முடியாமல் தடுமாறினார். ஆனால் அவருக்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான டி 20 தொடரின் மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்து தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்நாயகன் விருதைப் பெற்ற பின்பு பேசிய அவர் ‘மூன்று அரைசதங்களும் எனக்கு சிறப்பானவை. நீங்கள் பார்முக்கு வரவேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு பந்தே போதுமானது. பந்தை கவனமாகப் பார்த்து அதன் தரத்துக்கு ஏற்ப விளையாடினேன். காயத்துக்கு பின் மீண்டு வந்திருக்கும் இந்த பயணம் கண்டிப்பாக ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவம். உண்மையான சோதனைக் காலம் என்றால் அது காயத்தில் இருந்து மீளும் காலம்தான்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் ‘டி 20 போட்டிகளில் இன்னிங்ஸை சிறப்பாக விளையாடக் கூடிய இடம் முதல் மூன்று இடங்கள்தான். நீங்கள் பின்வரிசையில் ஆடினால் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாட வேண்டும். எனவே தனிப்பட்ட முறையில் எனக்கு பேட்டிங் செய்ய சிறந்த இடத்தை நான் சொல்வதென்றால் அது மூன்றாம் இடத்தில் இறங்குவதுதான்’ எனக் கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி கடந்த 10 ஆண்டுகளாக மூன்றாம் இடத்தில் இறங்கி ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெத் ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் மோசம்: கவாஸ்கர் விமர்சனம்