Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணிக்கு தலா ரூ.80 கோடி... ஜனவரியில் ஐபிஎல் ஏலம்!!

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (16:43 IST)
பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் உரிமத்தை இந்த ஆண்டு அதிக விலை கொடுத்து ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
 
மேலும், போட்டி நேரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்த உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 11 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிசிசிஐ மூத்த அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். 
 
ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக செலவிடும் ஒட்டுமொத்த தொகையை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’நான்தான் அடுத்த சச்சின் என சொல்லிக் கொண்டிருப்பார்’- கோலியின் டீச்சர் பகிர்ந்த தகவல்!

விராட் கோலிதான் ஆர் சி பி அணியின் மிஸ்டர் safety… ஆதங்கத்தைக் கொட்டிய டிவில்லியர்ஸ்!

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments