ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணிக்கும் வெற்றி பேரணி உண்டா ? பிசிசிஐ விளக்கம்..!

Siva
திங்கள், 3 நவம்பர் 2025 (15:49 IST)
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தங்களின் முதல் ஒருநாள் உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
 
ஆண்கள் அணிக்கு கிடைத்ததை போல, மகளிர் அணிக்கு வெற்றி பேரணி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குப்பதிலளித்த பிசிசிஐ செயலாளர் தேபாஜித் சைகியா, தற்போதுவரை எந்த பேரணிக்கும் திட்டமிடப்படவில்லை என்று கூறியுள்ளார். ஐ.சி.சி. கூட்டத்திற்காக துபாய் சென்றுள்ளதாகவும், திரும்பி வந்த பின்னரே முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
எனினும், பிரதமர் நரேந்திர மோடி வரும் நவம்பர் 5-ஆம் தேதி முழு அணியையும் சந்தித்து பாராட்டவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இறுதி போட்டியில், தீப்தி ஷர்மா அரை சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஷஃபாலி வர்மா 87 ரன்கள் குவித்ததுடன், 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகி விருதை வென்றார்.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜா சம்மதித்தால் மட்டுமே அணி மாற்றப்படுவார்: ஐபிஎல் 2026 புதிய விதிகள்..!

உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

ஆஹா எல்லா சிம்டம்ஸும் கரெக்டா இருக்கே… ஜட்டுவுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்த ஜெய்ஸ்வால்!

இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த ரஷித் கான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments