Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லிக்கு 7 கோடி ; தோனிக்கு 5 கோடி – பிசிசிஐ புதிய சம்பள ஒப்பந்தம் !

Webdunia
வெள்ளி, 8 மார்ச் 2019 (13:51 IST)
பிசிசிஐ இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் புதிய சம்பள ஒப்பந்தத்தை இன்று வெளியிட்டுள்ளது.

பிசிசிஐ ஆண்டு தோறும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்தத்தைப் போடும். அதன் படியே அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படும். அதுபோல இந்த ஆண்டுக்கான புதிய சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் 25 வீரர்கள் 4 பிரிவுகளின் கீழ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏ + எனும் முதன்மைப் பிரிவில் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ 7 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்தப் பிரிவான ஏ பிரிவில் தோனி, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரஹானே, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ஷிகர் தவன், குல்தீப் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய 13 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் ஆண்டு ஊதியம் 5 கோடி ரூபாய் ஆகும்.

அதற்கடுத்த பிரிவான பி பிரிவில் கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், யுஜ்வேந்திர சஹல், ஹர்திக் பாண்ட்யா  ஆகியோர் 3 கோடி ரூபாய் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

சி பிரிவில், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அகமது, விரிதிமான் சாஹா ஆகியோர் உள்ளனர். வருடத்திற்கு இவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, பார்த்தீவ் படேல், ஜெயந்த் யாதவ், அக்‌ஷர் படேல், கருண் நாயர் ஆகியோர் இந்த ஆண்டு கழட்டி விடப்ப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments