Publish Date: Thu, 07 Mar 2019 (11:45 IST)
Updated Date: Thu, 07 Mar 2019 (11:48 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது களத்தில் இருக்கும் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். போட்டிகளில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையின் போது தகுந்த ஆலோசனைகளை வழங்கி வீரர்களை ஊக்கப்படுத்துகிறார்.
இந்நிலையில், தோனி பிறந்த ஊரான ராஞ்சியில் அவரை கவுரவிக்கும் வகையில் அங்கு உள்ள கிரிக்கெட் மைதனாத்தில் தென் பகுதியில் அமைந்துள்ள கேலரிக்கு எம்.எஸ்.தோனி பெவிலியன் என்று பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தோனியின் பெயா் சூட்டப்பட்டுள்ள பெவிலியனை திறந்து வைக்க தோனிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆம், தோனி பெவிலியன் கேலரியை திறந்து வைக்க ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தோனிக்கு அழைப்பு விடுத்தனா்.
ஆனால் இந்த அழைப்பை ஏற்க தோனி மறுத்துவிடார். இந்த மறுப்புக்கு பின்னர் ஒரு காரணம் உள்ளதாம். அதாவது, நானே அந்த கேலரியை திறந்து வைத்தால் சொந்த ஊரில் அந்நியனாக நினைக்க தோன்றும் என தோனி தெரிவித்தாராம்.
webdunia
Publish Date: Thu, 07 Mar 2019 (11:45 IST)
Updated Date: Thu, 07 Mar 2019 (11:48 IST)