கிரிக்கெட்டில் விளையாட்டில் மைதானத்தில் களமிறங்கி ஆடுகின்ற வீரர்களுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டடால், அவருக்கு பதிலாக மாற்று வீரர் இறக்கப்படுவர். ஆனால் அவர் களத்தில் இறங்கினால் பந்துவீசவோ பேட்டிங் செய்யவோ முடியாது. பீல்டிங் மட்டுமே செய்யமுடியும். இந்நிலையில் இன்று பிசிசிஐ மாற்று வீரர்கள் களமிறங்கினால், அவர்களும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மட்டுமே தான் இதுநாள் வரை பேட்டிங் மற்றும் பந்துவீச முடியும். அவர்களில் ஒருவருக்கு பேட்டிங் செய்யும் போது தலையில் அடிபட்டால் அவர் ரிட்டயர்டு ஹர்ட் மூலம் வெளியேறுவதாக கருதப்படும்.
அவரருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் இறக்கப்படுவர். ஆனால் அவர்கள் களத்த்ல் இறங்கினால் பந்துவீசவோ பேட்டிங் செய்யவோ முடியாது. பீல்டிங் மட்டுமே செய்யமுடியும். இந்நிலையில் இன்று பிசிசிஐ ,மாற்று வீரர்கள் களமிறங்கினால், அவர்களும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஈடுபடலாம் என தெரிவித்துள்ளது. இதுகுறித்து நீண்ட நாட்களாக பரிசீலனையில் இருந்த இந்த கோரிக்கைக்கு இன்று ஐசிசி அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.