Publish Date: Fri, 29 Mar 2019 (19:48 IST)
Updated Date: Fri, 29 Mar 2019 (19:53 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 8வது போட்டி இன்று ஐதரபாத்தில் ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. சற்றுமுன் டாஸ் போட்ட நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இதன்படி இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் களமிறங்கவுள்ளனர்.
ஐதராபாத் அணியில் ஆடும் 11 பேர்களாக வார்னர், பெயர்ஸ்டோ, வில்லியம்சன், விஜய் சங்கர், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ஷாபாஸ் நாடீம், சந்தீப் சர்மா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் ராஜஸ்தான் ஆடும் அணியில் ரஹானே, ஸ்மிதி, சாம்சன், ஸ்டோக்ஸ், ராகுல் திரிபதி, கவுதம், ஸ்ரேயாஸ் கோபால், ஆர்ச்சர், உனாகட், குல்கர்னி ஆகியோர் உள்ளனர்.
இரு அணிகளுமே ஏற்கனவே விளையாடிய முதல் போட்டியில் தோல்வி அடைந்திருப்பதால் முதல் வெற்றியை ருசிக்க தீவிரமாக இருக்கும். இருப்பினும் ஐதராபாத் அணிக்கு சொந்த மைதானம் என்பது கூடுதல் பலம் என்பது குறிப்பிடத்தக்கது.