Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்ஸர் அடித்தால் அவுட். புது விதியால் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி..!

Siva
புதன், 24 ஜூலை 2024 (07:33 IST)
இங்கிலாந்து நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சிக்சர் அடித்தால் பேட்டிங் செய்பவர் அவுட் என்ற புதிய விதி கொண்டு வந்து இருப்பதை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்து நாட்டின் 234 ஆண்டுகள் பழமை வாய்ந்த உள்ளூர் கிரிக்கெட் கிளப்  சவுத்விக் அண்ட் ஷோரேஹம் கிளப்பில் விளையாடும் வீரர்கள் சிக்ஸர் அடிக்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதையும் மீறி முதல் சிக்சர் அடித்தால் முதல் சிக்ஸருக்கு ரன் இல்லை என்றும் இரண்டாவது சிக்சர் அடித்தால் அந்த பேட்ஸ்மேன் அவுட் என்ற புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அணிகள் விளையாடும் மைதானம் ஊருக்கு மத்தியில் இருப்பதால் வீரர்கள் சிக்ஸர்கள் அடிக்கும்போது மைதானத்திற்கு வெளியே சென்று அங்கு உள்ள வீடுகளின் மேல் விழுவதாகவும் இதனால் தங்கள் வீடுகள் சேதம் அடைவதாகவும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.
 
இந்த புகாரை அடுத்து இனிமேல் சிக்சர் அடிக்கக்கூடாது என பேட்ஸ்மேன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மைதானத்தின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியாக புகார் அளித்து வருவதால் சிக்ஸர் அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments