Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியை வென்றுவிட்டோம் என உச்சத்துக்கு செல்லவேண்டாம்… வீரர்களுக்கு பாபர் ஆசம் அறிவுரை!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (12:25 IST)
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் அணி முதல் முதலாக இந்திய அணியை உலகக்கோப்பையில் வெற்றி பெற்றுள்ளது. அதன் பின்னர் வீரர்களிடம் பேசிய அணியின் கேப்டன் பாபர் ஆசம் ‘இந்தியாவை வென்றுவிட்டோம் என்று யாரும் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு செல்லவேண்டாம். இது அணியில் உள்ள எல்லோருக்கும் கிடைத்த வெற்றி. நமது நோக்கம் உலகக் கோப்பையை வெல்வதுதான். இந்தியாவை வென்றுள்ளதால் நம்பிக்கை பிறந்துள்ளது. இது நீண்ட நாட்களுக்கு தொடரவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments