Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானுக்கு எதிரான டி20: கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

Advertiesment
aus vs pak T20
, புதன், 6 ஏப்ரல் 2022 (08:15 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான டி20: கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில் ஏற்கனவே ஒருநாள் தொடர்கள் சமீபத்தில் முடிந்தது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற இருநாட்டு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் வழக்கம்போல் சூப்பராக விளையாடி 66 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது 
 
163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது. கேப்டன் பின்ச் 55 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றார்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் 2022-; பெங்களூர் அணி சூப்பர் வெற்றி