இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
புனேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூருவில் நடந்த 2 வது டெஸ்டில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தற்போது நான்கு விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 194 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் சுமித் 80 ரன்களுடனும், மேட்ஸ்வெல் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.