Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2019 உலக கோப்பையில் தோனி பங்கேற்பாரா??

Advertiesment
2019 உலக கோப்பையில் தோனி பங்கேற்பாரா??
, புதன், 15 மார்ச் 2017 (12:07 IST)
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்து 2019 உலகக்கோப்பை வரை தோனி நீடிப்பது தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது. 


 
 
தோனியின் சிறுபிராய பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தோனி 2019 ஆண்டு நடைபெறயுள்ள உலக கோப்பை போட்டியில் தோனியின் பங்களிப்பு பற்றி பேசியுள்ளார். 
 
அவர் கூறியதாவது, இப்போதைக்கு தோனியின் கவனம் முழுதும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் தான் உள்ளது. அதில் அவர் நன்றாகச் செயல்பட்டால் நிச்சயம் 2019 உலகக்கோப்பையில் ஆடுவார் என்று தெரிவித்துள்ளார்.
 
மேலும், வயது அதிகமாகும் போது ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிப்பது கடினம். ஆனால் தோனி சிறப்பானவராவே உள்ளார். சாம்பியன்ஸ் டிராபிக்காக முழு உடல்தகுதியுடன் அவர் விளையாட உள்நாட்டு விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் பங்கேற்றார். 
 
டெஸ்ட் போட்டிகளில் அவர் யாரும் தன்னை நோக்கி விரலை நீட்டும் முன் ஓய்வு அறிவித்தார். தோனி எப்போது என்ன செய்ய வேண்டும் என்பதை நன்கு அறிவார் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராத் கோஹ்லியை போல என்னாலும் விளையாட முடியும். பாகிஸ்தான் வீரர் அதிரடி