பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் சென்ற நிலையில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வரும் நிலையில் இதில் பங்கேற்க தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பெண்கள் அணியினர் சென்றனர்.
இந்த நிலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகத்திற்கும் தர்பாங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையே இன்று நடந்த கபடி போட்டியின் போது தமிழக வீராங்கனை மீது பவுல் அட்டாக் நடந்தது. இது குறித்து இரு தரப்பு இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் நடுவரிடம் முறையிடப்பட்டது.
அப்போது பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த நடுவர் தமிழக வீராங்கனையை தாக்கியதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும் நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து தமிழ்நாடு கபடி சார்பாக, ராஜஸ்தான் கபடி சார்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது என்றும் போட்டி ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.