Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

24 ரன்களில் 6 விக்கெட்: இந்தியாவிடம் சரண்டர் ஆன இலங்கை

Advertiesment
asian cup final
, சனி, 15 அக்டோபர் 2022 (13:44 IST)
24 ரன்களில் 6 விக்கெட்: இந்தியாவிடம் சரண்டர் ஆன இலங்கை
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் தற்போது இலங்கை அணியின் பேட்டிங் செய்து வருகிறது 
 
இந்திய அணி வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இலங்கை அணி வீராங்கனைகளின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்து வருகின்றன. அந்த அணி 8 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவின் ரேணுகா சிங் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“சூர்யகுமார் யாதவ் இல்லை… உலகக் கோப்பையில் இவர்தான் ஜொலிக்க போகிறார்…” ஆகாஷ் சோப்ரா கருத்து!