மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி சாம்பியன்!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று நடந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்தது
இந்தநிலையில் 66 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து 71 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை பெற்றது
ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ரேணுகா சிங் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் தொடர் நாயகியாக தீப்தி ஷர்மா தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது