ஆசிய கோப்பை கிரிக்கெட்: UAE அணியை பந்தாடிய இந்திய வீரர்கள்

Siva
வியாழன், 11 செப்டம்பர் 2025 (08:45 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில், இந்தியா, யுஏஇ அணியை மிக எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
 
முதலில் பேட்டிங் செய்த யுஏஇ அணி, இந்திய பந்துவீச்சின் அபார தாக்குதலால் வெறும் 57 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி 13 ஓவர்கள் மட்டுமே விளையாடியது. யுஏஇ அணியில் முதல் இரண்டு பேட்ஸ்மேன்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் மிக சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்த, சிவம் துபே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
58 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 4.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், குரூப் 'ஏ' பிரிவில் இந்திய அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
 
இன்று வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments