கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த டி 20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது. அதையடுத்து ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்தனர்.
இதையடுத்து சூர்யகுமார் தலைமையில் இளம் இந்திய அணி டி 20 அணி உருவாகி வருகிறது. தற்போது அந்த அணி ஆசியக் கோப்பை தொடரில் விளையாட அமீரகத்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில் அடுத்த டி 20 உலகக் கோப்பை தொடர் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் மார்ச் 7 வரை போட்டிகள் இந்தியாவில் ஐந்து மைதானங்களில் நடக்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் இரண்டு மைதானங்களில் நடத்த உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது.