Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் காயமடைந்த போது என்னை யாரும் ஆதரிக்கவில்லை… அஸ்வின் உருக்கம்!

நான் காயமடைந்த போது என்னை யாரும் ஆதரிக்கவில்லை… அஸ்வின் உருக்கம்!
, புதன், 22 டிசம்பர் 2021 (10:26 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் காயம் காரணமாக 2018-2020 ஆகிய ஆண்டுகளில் மிகவும் அவதிப்பட்டார்.

இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான தூணாக விளங்குவர் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இப்போது கடுமையான போராட்டத்துக்கு பின்னர் டி 20 கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் கிரிக் இன்போ தளத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் ‘நான் கடுமையான காயங்களால் அவதிப்பட்டேன். உடம்பின் பல பகுதிகளில் வலி இருந்தது. எந்த அளவுக்கு என்றால் ஒரு ஓவரை வீசிவிட்டு மூச்சுவிட திணறுவேன். அந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வு பெற்றுவிடலாமா என்று எண்ணினேன். காயமடைந்த வீரர்களை ஆதரிக்கும் போது என்னை மட்டும் அந்த தருணத்தில் யாரும் ஆதரிக்கவில்லை. நான் அணிக்காக நிறைய போட்டிகளை வென்று கொடுத்துள்ளேன். நான் விரக்தி மனநிலையில் இருக்கும் போது என் தந்தை ‘நான் இறப்பதற்குள் நீ வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு திரும்பிவிடுவாய்’ என்று தீவிரமாகக் கூறிவந்தார்’ என உருக்கமாக பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்; வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா விலகல்