Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெருங்காயத்தின் அற்புத மருத்துவ பயன்கள் !!

பெருங்காயத்தின் அற்புத மருத்துவ பயன்கள் !!
கக்குவானுக்கு பெருங்காயத்தை வறுத்துத் செய்து பட்டாணியளவும், படிகாரத்தூள் உளுந்தளவும் எடுத்து, தேன் விட்டுக் குழப்பிக் காலை, பகல், மாலையாக ஒரு நாளைக்கு மூன்றுவேளை தொடர்ந்து கொடுத்து வந்தால் கக்குவான் குணமாகும்.

பெருங்காயத்தை சுண்டைக்காயளவு இருந்து பொரித்து தூள் செய்து வாழைப்பழத்தில் வைத்துத் தின்று வந்தால் நரம்பு சிலந்தி சீக்கிரமாக வெளியேறும்.
 
சிறிதளவு பெருங்காயத்தை பொரித்து அதை தூள் செய்து காலை வேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நான் கொடுத்து வந்தால் அண்டவாய்வு குணமாகும். 
 
இரண்டு சுண்டைக்காயளவு பெருங்காயத்தை சிற்றாமணக்கெண்ணெய்யில் பொரித்து எடுத்து விட்டு அதே எண்ணெய்யில் தோல் உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள் 20 கிராம் போட்டு, நன்றாகச் சிவந்து வரும் சமயம் பெருங்காயத்தையும் போட்டு, கீரைக் கடையும் மத்தைக் கொண்டு கடைய வேண்டும். 
 
இது கூழ்போல மெழுகு பதம் வந்தவுடன் ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 30 கிராம் பனை வெல்லத்தை அதில் போட்டு பாகுபதம் வரும் சமயம் அதில் இதைப் போட்டு மறுபடி கடைந்து லேகியம் போலச் செய்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு மாலையில் இரண்டு சுண்டைக்காயளவு எடுத்துச் சாப்பிட்டு வெந்நீர் குடிக்க வேண்டும். இவ்விதமாகத் தொடர்ந்து 21-நாட்கள் சாப்பிட்டால் பாரிச வாய்வு குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாகும் கருஞ்சீரகம் !!