ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!

Mahendran
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (12:00 IST)
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியில், இளம் வீரர் திலக் வர்மாவின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய அணியின் வெற்றிக்கு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃபும் ஒரு காரணம் என்றும், அவருக்கு நன்றி என்றும் கிண்டலாக தெரிவித்தார். 
 
ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 147 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, களமிறங்கிய திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து, இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 
 
இந்த வெற்றி குறித்து அஸ்வின் பேசுகையில், "திலக் வர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தபோது, அவர் தனது பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டார். அதே நேரத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃபிற்கு நன்றி, அவரால் தான் நாங்கள் எளிதாக வென்றோம்" என்று குறிப்பிட்டார்.
 
மேலும், சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரையும் அஸ்வின் பாராட்டினார். .
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகும் ரிஷப் பண்ட்… உள்ளூர் போட்டிகளில் விளையாட முடிவு!

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அவர் ஏன் அணியில் இருக்கிறார் என்று தெரியவில்லை… இளம் வீரர் குறித்து ஸ்ரீகாந்த் காட்டம்!

கோலி & ரோஹித்துக்கு சிறப்பான ‘send off’ கொடுக்க விரும்புகிறோம்… ஆஸி கிரிக்கெட் வாரிய அதிகாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments